நடிகை வனிதா விஜயகுமார் , 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளும் பிறந்த நிலையில்,கருத்து வேறுபாடு காரணமாக 2007ல் அவரை விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு [பெண்குழந்தை பிறந்தது.
இந்நிலையில் , 2012-ம் ஆண்டு அவரையும் பிரிந்தனர். இதையடுத்து, நடிகரும் நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டருடன் வனிதா தாளிக்காட்டாமல் குடித்தனம் நடத்தி வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. ராபர்ட் மாஸ்டர் நடித்த எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தில் வனிதா நடித்திருந்தார். அதன் பின் இருவரும் பிரிந்தனர். சில வருடங்களுக்கு பிறகு யு டியூப் வலைதளம் தொடங்கி நடத்தி வந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா ஓரிரு மாதங்களில் அவரையும் பிரிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில்,பர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்கிற படத்தில் நாயகன் நாயகியாக நடிக்க கமிடீ ஆகியுள்ளனர் . இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கதற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் வனிதாவின் அப்பாவாக ரவிகாந்தும் அம்மாவாக ஷகீலாவும் நடிக்க உள்ளனர் இவர்களுடன் நடிகர் பிரேம்ஜி மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் கமிட்டாகி உள்ளதாக்க கூறப்படுகிறது.












