‘திரைவி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட இயக்குனர் சசி!

பி. ராஜசேகரன் தயாரிப்பில்,கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கியுள்ள புதிய படம், ‘திரைவி’ . இப்படத்தில் முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன்,  வினோத் சாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘பூ’, ‘பிச்சைக்காரன்’  உள்ளிட்ட  படங்களின் இயக்குனர் சசி, தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

இப்படம் குறித்து இயக்குனர் கார்த்தி தட்சிணாமூர்த்திகூறுகையில்,”உலகில் நல்லவர்களும் யாரும் கிடையாது கெட்டவர்களும் யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் இது” என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர். அதிசயராஜ் கவனிக்க, என்.டி.ஆர் இசையமைத்து வருகிறார்.