‘இந்தியன் 2’ படத்தின் ‘2வது சிங்கிள்’ நாளை மறுநாள் வெளியாகிறது!

கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதில்,பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை தொடந்து நடத்துவதில் ஒரு சில காரணங்களால் தாமதமானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அடுத்த மாதம் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் , ரஜினிகாந்த், ராம்சரண், இயக்குனர் மணிரத்னம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இந்தி நடிகர் ரன்வீர் சிங், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்கவுள்ளனர் என்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் (பாரா) வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை மறுநாள் (29ம் தேதி) மாலை வெளியாக உள்ளதாக பட குழு தற்போது அறிவித்துள்ளது.. அதிரடி பாடலாக வெளியான முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடல் ரொமான்டிக்காக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.