ஒரே நாளில் பிறந்தநாள்: இளையராஜா மற்றும் மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

இசையுலகில் ஜாம்பவான் இளையராஜா.இயக்குனர்களின் ஜாம்பவான் மணிரத்னம் இருவருக்கும் இன்று பிறந்த நாள். திரையுலகினர் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது,, “இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது.

இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்… பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க” என குறிப்பிட்டுள்ளார்