நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியினருக்கு ஏற்கனவே , ஆராதனாஎன்ற மகளும்,, குகன் என்ற மகனும் உள்ள நிலையில், அவருடைய மனைவி மூன்றாவதாக கர்ப்பம் தரித்திருக்கும் தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதையடுத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறினர் இந் நிலையில் நேற்று இரவு ஆர்த்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது, “ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனா, குகன் இருவருக்கும் கொடுத்த அதே அன்பையும் ஆசீர்வாதத்தையும் எங்களுடைய மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.