ரஜினிகாந்த், நாளை மாலை சென்னை திரும்புகிறார்!!
நடிகர் ரஜினிகாந்த், ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக பயணமாக இமயமலை செல்வது வழக்கம். ஆனால் உடல் நலக்குறைவு மற்றும் கொரோனா தொற்று காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்,தனது நண்பர்களுடன் சென்றார்.
இந்த வருடம் கடந்த மாதம் 29-ம் தேதி தனது நண்பர்களுடன் இமயமலை சென்றார். அங்கு வழக்கமாகச் செல்லும் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்நிலையில், தனது இமயமலை பயணத்தை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், நாளை மாலை சென்னை திரும்புகிறார். சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் அடுத்து நடிக்கும் ‘கூலி’ படத்த்தின் படபிடிப்பில் கலந்து கொள்கிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்கிறார்.