‘மட்கா’ படத்துக்காக உருவான பழமையான வைசாக் நகரம் !

‘மெகா பிரின்ஸ்’ வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து பான் இந்திய திரைப்படமாக   “மட்கா” படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் இயக்குனர் கருணா குமார், தேசத்தையே உலுக்கிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமான திரைக்கதையை எழுதியுள்ளார்.இப்படத்தின் நாயகனாக   வருண் தேஜ் நடிக்க,மீனாட்சி சவுத்ரி நாயகியாகவும், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.மொத்தம் .35 நாள் திட்டமிடப்பட்டுள்ள  இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் ரூ.15 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ரூ.15 கோடி செலவில் பழமையான  வைசாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை,  தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய  வைசாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும்.கடந்த காலத்திலிருந்த வைஸாக்கின் வசீகரத்தையும் அதன் அமைப்பையும்  பிரதிபலிக்கும் வகையில், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட், படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்  என்கிறது இப்படத்தின் தயாரிப்பு தரப்பு.