மகாராஜா படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்தபடம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார்.ஏற்கனவே இந்த ஜோடி மலையாளத்தில் வெளியான 19 (1) (ஏ) படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தமிழில் இருவரும் இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.விரைவில் தொடங்கவுள்ள இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.




