ஜூலை 15 ஆம் தேதி தொடங்கும் ‘சர்தார்-2’
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.ஆக்ஷன் த்ரில்லராக உருவான இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான லீடும்இடம்பெற்று இருந்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் நேற்று ‘சர்தார்-2’ படத்திற்கான பூஜை சென்னையில் நடந்தது.இப்படத்துக்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப் பட்டு வரும் நிலையில்,இதன் படப்பிடிப்பு,வரும் ஜூலை 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படக்குழுவினர் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.கவனிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.