‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ !
வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரித்துள்ள புதிய படம்,’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ இப்படத்தை ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்கமுழுக்க இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” நட்பு பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் பரிசு .நட்பிற்காக இந்தப் படத்தில் இணைந்தேன். நட்பின் சாரத்தை இப்படம் கொண்டாடியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நண்பர்கள் தினமான வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார்.இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு, சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது.