விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும், ‘ஓர் மாம்பழ சீசனில்’!

ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படத்தை இயக்கிய  சதீஷ் செல்வகுமார்  இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்திற்கு  ‘ஓர் மாம்பழ சீசனில்  என வித்தியாசமாக மாக தலைப்பிடப்பட்டுள்ளது.இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.இப்படத்தில் நேற்று தனது  பிறந்த நாளை கொண்டாடிய  விஷ்ணு விஷால் கதாநாயகனாக  நடிக்க உள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.  அறிவிப்பு போஸ்டரில் வெட்டி வைக்கப்பட்ட மாம்பழமும், அதனருகில் எறும்பு ஒன்றும் உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.