5 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தும் ‘சுராஜ் வெஞ்சரமுடு’!
பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முழுமையான பொழுதுபோக்கு காமெடி தொடராக”நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்” உருவாகியுள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த தொடரில் , சுராஜ் வெஞ்சரமுடு ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன்,ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இத்தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) என ஏழு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை நிதின் ரஞ்சி பணிக்கர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.