காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா உள்ளிட்ட படங்களின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால், தனது பிறந்தநாளை
முதியோர் இல்லத்தின் உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்ளார் இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும்,இன்ஸ்டாகிராமில் சுமார் 2.1 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள சாக்ஷி அகர்வால், தன்னுடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக பீச்சில் வெள்ளை பிகினியில் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து இளவட்டங்களின் தூக்கத்தையும் கெடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பார்த்த பார்த்த ரசிகர்கள் பிறந்த நாளுக்கு செம ட்ரீட் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.தமிழில் தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ள சாக்ஷி அகர்வால் , கன்னடம் மற்றும் மலையாளத்தில் தான் அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார்.