ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனைக்கு கமல் பாராட்டு!
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஹரியானா வீராங்கனை மனு பாக்கர் சாதனை படைத்துள்ளார். இந்த வரலாற்று சாதனையை படைத்த மனு பாக்கரை உலக நாயகன் கமலஹாசன் , தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,”உங்களின் செயல்திறன் மிகவும் சிறப்பானது மற்றும் அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. நீங்கள் PT உஷா, கர்ணம் மல்லேஸ்வரி மற்றும் மேரி கோம் போன்ற ஜாம்பவான்களின் பரிசையில் இணைகிறீர்கள். இந்த சாதனை அடுத்த தலைமுறை குழந்தைகளை உங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஊக்குவிக்கும் என பதிவிட்டுள்ளார்.