எனக்கு எதிராக நடந்த சதி ! எரிமலையாய் வெடிக்கும் விஜய்மில்டன்.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ இன்று வெளியானது. இந்நிலையில்,இப்படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படம் பண்ணியிருந்தேன். ஆனால், ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியிலேயே அவன் யார் என்பதை வெளியிட்டு விட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும். இது யார் செய்த சதி என தெரியவில்லை என இயக்குனர் விஜய் மில்டன் ஏகத்துக்கும் குமுறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது,” “பொதுவாக படம் ரிலீஸ் ஆகும் தேதியில், வெளியூர் சென்றுவிடுவேன். ஆனால் இப்படத்தை பத்திரிக்கையாளர்களோடு பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்த படத்தில் ஹீரோ யார்?, அவன் எங்கியிருந்து வந்திருக்கிறான், அவன் ரௌடியா, அடியாளா, டாக்டரா என்ற களை வச்சு தான் இந்த  கதையை பண்ணியிருக்கேன் . அதாவது மர்மமான முறையில் ஒருவன் வருகிறான், அவனுக்கு அடிப்பட்டிருக்கு, அந்த அடி ஏன் பட்டிருக்கு, அவன் பின்னாடி யார் இருக்கா, அவன் கூட வர சரத்குமார் யாரு, இவனுக்குப் பின்னாடி என்ன கதை இருக்கு என நிறையக் கேள்விகளைக் கொண்டு இந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதியிருந்தேன். ஆனால் படம் பார்க்கும் போது எனக்கே ஷாக்காகி விட்டது. பட ஆரம்பத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு ஃபுட்டேஜ் இருக்கிறது. அதை நான் வைக்கவில்லை. அது எப்படி வந்தது என்றும் எனக்குத் தெரியவில்லை. அந்த 1 நிமிட வீடியோவில் ஹீரோ யார், எங்கிருந்து வருகிறான், அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார் என எல்லாத்தையுமே சொல்லிவிடுகிறார்கள். இப்படி செய்தால் எப்படி அந்த படத்தைப் பார்க்க முடியும். இதற்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்தோம். சென்சார் பண்ண படத்தில் ஒரு நிமிட வீடியோவை சேர்க்கும் உரிமையை யார் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இயக்குநரைக் கேட்காமல் இது நடந்திருக்கிறது. உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைத்துக்கொள்கிறேன். தயவு செய்து படம் பார்ப்பவர்கள் அந்த ஒரு நிமிட வீடியோவை மறந்துவிட்டு இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும்”என ஏகத்துக்கும் குமுறியுள்ளார்.