6 விருதுகளை அள்ளிய நானியின் ‘தசரா’ !
நேச்சுரல் ஸ்டார் நானியின் ஆக்சன் அதிரடி திரைப்படமான “தசரா” திரைப்படம்,ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் ஆறு விருதுகளை வெவ்வேறு பிரிவுகளில் வென்றுள்ளது. இப்படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.இது குறித்து நடிகர் நானி கூறுகையில்,”நடிகர் நானி கூறியதாவது.. , “எனக்குப் பல விருதுகளை வெல்ல வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்திலிருந்தது, ஆனால் காலப்போக்கில் அந்த ஆசை குறைந்துவிட்டது. விருதுகளுக்காக எனக்கே அதிக ஆசை இல்லை. மாறாக, என்னுடைய இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், என் படங்களில் அறிமுகமான புதிய திறமையாளர்கள், மற்ற கலைஞர்கள் விருதுகளைப் பெற வேண்டும் என்பதே எனது இப்போதைய ஆசை. இப்போது அது நடந்திருப்பது என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.
என்னைப் பொறுத்தவரை, இந்த விருது அவர்கள் விரும்பும் இடத்தை அடைய அவர்களின் பயணத்தின் ஒரு சிறிய பகுதியாக இருக்கும். அவர்களின் முதல் அடிக்கு நான் மிகச் சிறிய அளவிலாவது பங்களித்திருந்தால் அதுவே எனக்குப் போதுமானது. 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தசரா மற்றும் ஹாய் நானா ஆகிய சிறந்த திரைப்படங்கள் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.”என்கிறார்