ஹாலிவுட்டின் தரத்தில் உருவாகும்‘ஆடி வெள்ளி’!
Related Posts
தமிழ் திரையுலகில் கடந்த1990-ல் இயக்குநர் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆடி வெள்ளி’ படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் மீண்டும் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் தற்போதைய இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் கதையில் சில மாற்றங்களைச் செய்து, அம்மன் பக்தியுடன் அறிவியல் சார்ந்த சில விஷங்களைச் சேர்த்துள்ளது. தற்பொழுது உருவாகி வரும் ஆடி வெள்ளி படத்தின் சிஜி ஹாலிவுட் தரத்தில் தேவைப்படுவதால், ஜங்கிள் புக் படத்திற்கு அகாடமி விருதை வென்ற சிஜீ நிறுவனத்துடன் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே ஆடி வெள்ளி பிரமாண்டமாகவும், பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதாகவும் இருக்கும். மேலும் ஆடி வெள்ளியில் , சிறு யானை மற்றும் ராஜ நாகம் முக்கிய . பங்கு வகிக்கிறது. இப்படத்தை பி.வி. தரணிதரன் இயக்குகிறார், என். ராமசாமி தயாரிக்கிறார். நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.