‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ படத்தில்  தனுஷ்!

சமீபத்தில் வெளியான  ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகி வரும்  ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ‘இளையராஜா’ பயோபிக், அருண் மாதேஸ்வரனுடன் ஒரு படம், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் என அடுத்த 2 வருடங்களுக்கு அவரது கைவசம் பல படங்கள் இருக்கின்றன. மேலும் ‘போர்த்தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் தனுஷ் கமிட்  ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே தனுஷ்,’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில்,மார்வெல் ஸ்டூடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்’ பட வரிசையில், அடுத்ததாக ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே’ படம் உருவாகிறது. இதனை ‘ரூஸ்ஸோ பிரதர்ஸ்’ இயக்குகிறார்கள்.  ஏற்கனவே ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான தி க்ரே மேன் படத்தில்  நடித்துள்ள  தனுஷ்  இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதே படத்தில்தான் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கிறார் என்பதும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.