இன்று காலை நாக சைதன்யா – சோபிதா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது!
நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு காரணமானவராக கிசுகிசுக்கப்படும் நடிகை சோபிதா துலிபாலா வை நாகா சைதன்யா தீவிரமாக காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் தெலுங்கு திரையுலக மீடியாக்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,இன்று நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் நடை பெற்றதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த நிச்சயதார்த்தம் மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு நடப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகர்ஜுனா வெளியிடுவார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில்,நடிகர் நாகர்ஜுனா தனது சமூக வலைதளப் பக்கத்தில்,“என் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அவரை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தம்பதிகளுக்கு வாழ்த்துகள்” எனக் கூறி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார், இவரது பதிவை பார்த்த பலரும் நாகசைதன்யா- சோபிதா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்றனர்