ஐஸ்வர்யாராயுடன் விவாகரத்தா?- அபிஷேக் பச்சன் விளக்கம் !

உலக அழகி ஐஸ்வர்யா ராய்,  பாலிவுட் நடிகர்  அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில்,கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்; அதனால் அவர்கள் விவாகரத்து  செய்ய முடிவெடுத்துள்ளதாகவும்  சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  வதந்திகள்  பரவி  வருகிறது.இந்நிலையில் தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் விவாகரத்து  நடக்க உள்ளதாக  வெளியான தகவல் குறித்து அபிஷேக் பச்சன்  கூறியுள்ளதாவது, “எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேச எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அனைவரும் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். அது ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. நல்ல கதைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பிரபலங்கள் என்பதால் எங்களை பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை”  என கூறியுள்ளார்