நடிகர் விக்ரம் பாடிய, ‘அறுவடை’ பாடல்!
நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள தங்கலான் வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் கேஜிஎப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை மையமாகக் கொண்டு தங்கலான் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தற்போது படத்தின் 3வது சிங்கிள் வீடியோ பாடலாக வெளியாகி உள்ளது.இந்த பாடலை நடிகர் விக்ரம், சிந்தூரி விஷால், மதிச்சயம் பாலா, சுகந்தி உள்ளிட்ட பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள ‘தங்கலான்’ படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ. 1.8 கோடி இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தங்கலானின் திரையரங்கு உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன