குஷ்பு ;திடீர்; விலகல்!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குஷ்புவின் ராஜினாமாவை குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 2023 பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்ற குஷ்பு, ஒன்றரை ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்நிலையில் முழு நேர அரசியலில் பயணிப்பதற்காக மகளிர் ஆணையத்தில் இருந்து விலகி உள்ளேன். இதுநாள வரை கட்சி விழாக்களில் கலந்து கொள்ள முடியாத நிலையில், இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என விளக்கம் அளித்துள்ளார்.