துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணக் கதை யாக உருவாகியுள்ள புதிய படம், ’லக்கி பாஸ்கர்’ இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.முதலில் இந்தப் படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தீபாவளி வார இறுதியான அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.’பான் இந்தியா’ படமாக இந்தப் படம் வெளியாவதால் ஒவ்வொரு மொழி ரசிகர்களும் தங்கள் சொந்தப் படமாக இதை உணர வேண்டும் என படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. எண்பதுகளின் பிற்பகுதி மற்றும் தொண்ணூறுகளின் முற்பகுதியை ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மற்றும் மிகவும் திறமையான தயாரிப்பு வடிவமைப்பாளர் வங்காளன் இணைந்து விரிவான, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட் மூலம் மும்பையை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.என்கிறார் இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி தரத்தில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்துள்ளனர். மேலும் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் துல்கர் சல்மானின் சினிமா பயணத்தில் சிறந்த படமாக இருக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நடிகை மீனாட்சி சவுத்ரி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.