‘நாடெங்கும் நமது கொடி பறக்கும்’ ! நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு!!

 

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை தமிழகத்தின் வருங்கால வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன் என நடிகர் விஜய் கூறினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடிஏற்றி வைத்து உறுதிமொழி வாசித்தார்
பின்னர் அவர் பேசியதாவது,என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள், தமிழ்நாட்டு மக்கள் முன் கொடி ஏற்றுவதை பெருமையாக நினைக்கிறேன்.கட்சியின் முதல் மாநில மாநாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் .கட்சிக் கொடியை புதிய தலைமுறைக்கான கொடியாக பார்க்கிறேன். இதை ஏற்கனவே உங்கள் நெஞ்சத்தில், இல்லத்தில் ஏற்றிவிட்டீர்கள். இந்தக் கொடிக்கான அனுமதி, பதிவு போன்ற முன்னேற்பாடுகள் முறையாக வாங்கப்பட்டு இன்று ஏற்றப்படுகிறது. இதை தமிழகத்தின் வருங்கால வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன். நாடெங்கும் நமது கொடி பறக்கும்.நமது வெற்றி நிச்சயம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.