‘ஆர்.கே. ட்ரீம் பேக்டரி’ டி. ராதாகிருஷ்ணன், கே எம் பி புரடக்சன்ஸ் எம்.புவனேஸ்வரன் மற்றும் எஸ்.பி.எம் ஸ்டுடியோஸ் ஷாஜு சி. இணைந்து தயாரித்துள்ள புதிய படம் “நிர்வாகம் பொறுப்பல்ல”.இப்படத்தை ‘பேய் இருக்க பயமேன்’ படத்தை இயக்கி நடித்த சீ கார்த்தீஸ்வரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன்,இமான் அண்ணாச்சி,பிளாக் பாண்டி,ஆதவன்,அகல்யா வெங்கடேசன்,ஶ்ரீனிதி,கோதை சந்தானம்,அம்மன்புரம் சரவணன்,ராதாகிருஷ்ணன், எம்ஆர். அர்ஜுன்,மிருதுளா,
ஜெயஶ்ரீ சசிதரன்,தீட்சண்யா,மஞ்சு உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படம் குறித்து இயக்குனர் சீ கார்த்தீஸ்வரன் கூறுகையில்,இப்படம்,’உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக உருவாகி இருக்கிறது. நிஜத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இதன் படப்பிடிப்பு சென்னை, மும்பை, காஷ்மீர், குளுமணாலி கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது..என்கிறார். விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை என்.எஸ். ராஜேஷ்குமார் மேற்கொண்டுள்ளார் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்து வரும் இப்படத்தில் இசையமைப்பாளர் தேவா, சித்ரா, நடிகர் ஜெய் மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.