கோட் . தமிழ் நாட்டில் 7 மணி ஷோ அனுமதி.!சசிகலா ஏன் விண்ணப்பிக்க வில்லை?

தளபதி விஜய் நடித்து நாளை வெளிவரவிருக்கிற கோட் என்கிற படத்துக்கு தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி ஷோ வுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  எல்லாப் படங்களுக்கும் அதாவது உலக நாயகன், சூப்பர் ஸ்டார்,தல உள்ளிட்ட எல்லா சூப்பர் ஸ்டார் படங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை . ஆகவே கோட் படத்துக்கு மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது சரியாகாது .

ஆனால் காலை 7 மணிக்கு கோட் படத்தை திரையிட்டுக் கொள்ள ஸ்பெஷல் அனுமதி கோவையில் இருக்கிற பிராட்வே தியேட்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தியேட்டரில் ‘ரெக்லைன்ஸ்’ வசதி இருக்கிறது படுத்துக்கொண்டே பார்க்கலாம் ,இந்த பிராட்வேயில் 3 ஸ்கிரீன்ஸ் இருக்கிறது . ஐ மாக்ஸ் ,டால்பி அடக்கம் . இந்த தியேட்டர் அதிபர் அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்ததால் தனித்த அனுமதி கிடைத்திருக்கிறது. இந்த தியேட்டரில் 5 ஷோ நடத்தலாம் . ஆனால் டிக்கெட் கட்டணம் ரூ 500 மட்டுமே.! சென்னையிலும் இந்த வசதி உள்ள தியேட்டர்கள் 3 இருக்கிறது. அதில் ஒன்று சின்னம்மா சசிகலா நடத்துகிற ஜாஷ் தியேட்டர் என சொல்லுகிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக சென்னை ரோகிணி தியேட்டர் அதிபர் அனுமதி கேட்டு வருகிறார்.  (ரெக் லைன்ஸ்) ஆனால் கிடைக்கவில்லை.