தலைப்பைப் பார்த்ததும் கடுப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் கடைசி வரை வாசித்து முடியுங்கள். ! ஆமென் !
அரசியல் பிரவேசம் , சினிமாவிலிருந்து ஒதுங்கும் திட்டம், இதுவே கடேசிப் படம் என்கிற வெடி குண்டு வீச்சு எல்லாம் சேர்ந்து வெங்கட்பிரபுவின் ‘த கோட்’ படத்துக்கு விலையில்லா விளம்பரமாக அமைந்திருந்தது. தமிழ்ச் சினிமா ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை உருவாக்கியிருந்தது.
சில ஊடகங்கள் தளபதியின் ‘அபிமானத்தை’ பெறுகிற ‘ஆதாய ‘அடிப்படையில் கோட் படத்தை வானத்தின் மீது மிதக்க வைப்பதற்கு முயன்றன. ஆனால் முடிந்ததா ?
படம் எப்படி இருக்கிறது.?
இந்திய உளவு அமைப்பான ‘ரா ‘வின் உள் அமைப்பான ‘சாட் ஸ்குவாட் ‘டை சேர்ந்தவர்கள் விஜய் ,பிரசாந்த்,பிரபுதேவா ,அஜய் , இவர்கள் கென்யா , தாய் லாந்து ,ரஷ்யா ஆகிய நாடுகளில் காட்டுகிற கைவரிசைதான் கதை. ஒன்றிய அரசினால் தேடப்படும் குற்றவாளி மைக் மோகனை கைது பண்ண , கென்யா போகிறார்கள். இவர்கள் தேடிப்போகிற அளவுக்கு வொர்த் ஆனவராக அவர் தெரியவில்லை. பலவீனமான பிஞ்சு மூஞ்சி !!ஆனால் அந்த ரயில் சீன் செம. ரயில் வெடித்து சிதற . மோகனும் தப்பி விடுகிறார்.
அடுத்த மிஷன் தாய் லாந்து. அங்குதான் பல சம்பவங்கள் . திருப்பங்கள். மனைவி சினேகாவை மருத்துவமனையில் விஜய் அனுமதிக்கவேண்டிய கட்டாயம். மகன் ஜீவனுடன் நடக்கும்போது “அப்பா கால் வலிக்கிது ” என பிஞ்சு நடக்க தயங்குகிறான். ஆனால் ஆபத்து சூழ்ந்திருப்பது தெரிந்திருந்தும் விஜய் அம்போ என அவனை தனித்து உட்கார வைத்து விட்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அந்த பையன் தொலைந்து போகப்போகிறான் என்பதை இப்படியா வெளிப்படுத்துவது?
அடுத்தடுத்து ஆச்சரியங்களை அள்ளிவிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு வை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் எவ்வித ஒட்டுதலும் இல்லாமல் காட்சிகள் நகர்கிறது . விஜய் ,பிரசாந்த், பிரபுதேவா தொடர்புடைய காட்சிகள் எல்லாம் வெறுமனே சக்கையாக இருக்கின்றன. அப்பா விஜய் ,மகன் விஜய் புதிய தொழில் நுட்பத்துடன் படமாக்கப்பட்டிருக்கிறது. இதே தொழில் நுட்பத்தில் கேப்டன் விஜயகாந்தை தொடக்கத்தில் காட்டியிருக்கிறார்கள். மன நிறைவாக இல்லை.
ஆகச் சிறந்த ஹீரோவாக படைக்கப்பட்டுள்ள காந்தி ( விஜய்.) கதையில் என்ன உயர்வான சாதனை செய்திருக்கிறார்? ஆனால் சிறப்பான நடிப்பு. இரண்டு கேரக்டர்களிலும். படத்தின் ஜீவனே விஜய் தான்.! இரண்டு விஜய் களும் டோப்பா தலை மாதிரி . உறுத்தவில்லையா?
யுவனின் இசையை விட சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவு சிறப்பு.
படத்தில் சென்னை சேப்பாக் கிரிக்கெட் மைதானம் எப்போதுமே பரபரப்புதான். அதிலும் டோனி இறங்கினால் ?
“நீ யாருடைய ரசிகை ? ” என்று அண்ணன் விஜய் கேட்க தங்கை “தல ” என சொல்கிறபோது அலை அடிக்கிறது தியேட்டரில்.!
கோட் –தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி !
___தேவிமணி
.
கொஞ்சம் கூட யோசிக்காமல் பாடல்கள் உட்பட தேவையே இல்லாத 20 நிமிட காட்சிகளை எடிட்டர் விக்னேஷ் ராஜன் கத்தரித்திருக்கலாம். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ‘ஸ்பார்க்’ பாடல் வைக்கப்பட்ட இடம் படு அபத்தம். இத்தனைக்கும் அந்தப் பாடல் கேட்கும்படி கூட இல்லை. இணையத்தில் வெளியாகி இவ்வளவு எதிர்வினைகளை பெற்றபிறகும் அந்தப் பாடலை ஒரு முக்கியமான காட்சியின் நடுவே ஸ்பீடு பிரேக்கரைப் போல வைக்க ஒரு முரட்டுத்தனமான தைரியம் வேண்டும்.
ட்விஸ்ட் என்று வைக்கப்ட்ட ஒரு காட்சியும், அதற்கான பின்னணியும் மிகப் பெரிய லாஜிட் ஓட்டை. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஒரு பக்கம் கமென்ட்ரி, அதற்கு ஏற்ப இன்னொரு பக்கம் ஆக்ஷன் காட்சி என்று யோசித்த வெங்கட் பிரபுவை பாராட்டலாம். க்ளைமாக்ஸுக்கு முன்பு ஒரு கேமியோ வருகிறது. சினிமாவில் தனக்குப் பிறகு தன்னுடைய இடம் யாருக்கு என்பதை அந்தக் காட்சியில் விஜய் மிக ஓபனாகவே அறிவித்திருக்கிறார். ’இளைய’ தளபதிக்கு வாழ்த்துகள்.
வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியான அம்சங்கள் நிறைந்திருக்கும் என்பதை அவரது முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இதிலும் அப்படியான விஷயங்கள் ஆங்காங்கே உள்ளன. படத்தில் வரும் கேமியோக்கள் குறித்து ஆன்லைனில் பலரும் சொல்லிவிட்டாலும், அந்தக் கதாபாத்திரங்கள் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கின்றது. குறிப்பாக, படத்தின் தொடக்கக் காட்சியில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரும் ஒரு ‘முக்கியமான’ கேமியோ நிச்சயம் பரவலாக பேசப்படும்.
முன்பே குறிப்பிட்டபடி, அனுபவம் வாய்ந்த நடிகர்களின் கூட்டமும், வெறும் சர்ப்ரைஸ் கேமியோக்களால் மட்டுமே ஒரு படம் தரமான படமாகி விடாது. அதை பல ஆண்டுகளுக்கு நினைவில் ஆடியன்ஸின் மனதில் நிறுத்தச் செய்வது ஒரு நல்ல திரைக்கதை மட்டுமே. கைதட்டலுக்காக மட்டுமே வைக்கப்பட்ட கேமியோக்களுக்கும், ‘த்ரோபேக்’ நாஸ்டால்ஜியாக்களுக்கும் யோசித்ததை திரைக்கதைக்காகவும் கொஞ்சம் யோசித்திருந்தால் ஏற்றிவிட்ட ‘ஹைப்’புக்கு ஏற்றபடி ’கில்லி’யாக சொல்லி அடித்திருக்கும் இந்த ‘கோட்’.