தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஆரம்பமாகிறது. இதில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள்,
நாடக நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.
அதற்கு முன்பாக காலை 8மணி முதல் அனைவருக்கும் ‘இலவச மருத்துவ பரிசோதனை’ அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பாகவும், ‘சங்கர் ஐ-கேர்’ சார்பாக இலவச கண் பரிசோதனை நடை பெறுகிறது.
10 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகும்.
இதில் முக்கியமாக நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப் படுகிறது.
மேலும், மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், எம். ஏ.பிரகாஷ் ஆகிய பத்து பேருக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப் படுகிறது.
இப்போது குழுவில் நடிகைகள் பாதுகாப்பு கமிட்டி , நடிகர் சங்க நட்சத்திர கலைவிழா சங்கத்துக்கு நிதி உள்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும் தயாரிப்பளர் சங்கம் தனுஷ் உள்ளிட நடிகர்களுக்கு போட்டுள்ள ரெட் கார்டு விவகாரம் குறித்தும் பேசப்பட்ட உள்ளது.