ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ” ரத்தமாரே ” படக்குழுவினர்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அனிரூத் இசையில் இடம் பெற்ற” ரத்தமாரே ரத்தமாரே ” என்ற பாடல் வரியை தலைப்பாக வைத்து  புதிய  படம் ஒன்று உருவாகியுள்ளது. டி எஸ் எஸ் ஜெர்மனி பிலிம்ஸ் மற்றும் வி 2 கிரியேஷன் நியூ ஜெர்ஸி ஆகிய பட நிறுவனங்கள  கூட்டாக இணைந்து கிரௌட்   பண்ட் முறையில்  சுமார் 13 ஈழ மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இப்படத்தில்
லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா,  ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின்  கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் தினேஷா ரவிச்சந்திரன். வசனத்தை
ஹரிஷ் நாராயண், பொன். பார்த்திபன், டான் அசோக்.ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.ஒளிப்பதிவை  சந்தோஷ் ரவிச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.விபின் ஆர். இசையமைத்துள்ளார. இப்படம் குறித்து அதன் இயக்குனர் தினேஷா ரவிச்சந்திரன் கூறுகையில்,”அச்சம், மடம் , பயிர்ப்பு என்ற  மூன்று நிலைகளில், மனிதர்கள் வாழ்வில் மூன்று  கோணங்களில் நடக்கும்  சம்பவங்களை, அடர்த்தியான  திரைக்கதையைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறோம்.என் வாழ்வில் நான் பார்த்த என்னை பாதித்த , இந்த சமூகத்தில் மாறவேண்டிய , மாற்றவேண்டிய சில முக்கிய சம்பவங்களை இதில் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். இந்த படத்தின் மூலம் அது மாறும் என்றும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.ரத்தமாரே தலைப்பிற்காக மரியாதை நிமித்தமாக  ரஜினி சாரை  நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம்.  அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம் என்றார்.