பெரியாரின் சமூக நீதி பாதையில் பயணிப்போம்! நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!!
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளான இன்று சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சாதி மத ஆதிக்கம் மற்றும் மூட பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத்தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமை தலைகளை அறுத்தெறிந்தவர்.
மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூக சீர்திருத்தவாதி. பகுத்தறிவு பகலவன். ‘தென்னகத்தின் சாக்ரடீஸ்’ தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய பெண் உரிமை பெண் கல்வி பெண்கள் பாதுகாப்பு ,சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் இவ்வாறு அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.இந்நிலையில் சென்னை பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார் விஜய்.
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று அவரை போற்றி பதிவிட்டிருந்தநிலையில், விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தது போன்ற பல விஷயங்களால் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை காட்டுகிறார் என பேச்சுகள் எழுந்துள்ளது.இந்நிலையில், தற்போது பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியதும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.