தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில் உருவாகும் ‘ஷர்வா38’!
கே.கே.ராதாமோகன் ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் , தங்களது 15 படைப்பாக, ‘ஷர்வா38’ படத்தை தயாரிக்கிறது.1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில், வடக்கு தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில், இரத்தமே தீர்வாக இருக்கும் களத்தில், நடைபெற்ற சம்பவத்தை, அடிப்படையாக வைத்து பான் இந்திய படைப்பாக இயக்குனர் சம்பத் நந்தி இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. ‘இது இந்திய திரைத்துறையில் இது வரையிலும் பதிவாகாத வரலாறாக இருக்கும். இதுவரையிலான திரைத்துறை வரலாற்றில், இல்லாத புதுமையான படைப்பாக, இந்திய திரையுலகம் கண்டுகொள்ளாத ஒரு வரலாற்றின் கதையைச் சொல்லும் படமாக இருக்கும். என்கிறது ஷ்ரவா 38 படக்குழு. சில காலமாக இக்கதையை வெகு கவனத்துடன் உருவாக்கி வரும் இயக்குநர் சம்பத் நந்தி , ஷர்வாவை இதுவரை கண்டிராத புதுமையான கேரக்டரில் இப்படத்தில் காட்டவுள்ளார்.இதற்காக ஷர்வா, 60 களில் இருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளார் .தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவை சௌந்தர் ராஜன் எஸ் கவனிக்க, பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் பிற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது