‘தக்லைஃப்’ – தெறிக்க விட்ட டிஜிட்டல் வியாபாரம்!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம், ‘தக்லைஃப்’ இப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் கிராபிக்ஸ் உள்பட தொழில்நுட்ப பணிகளை தொடங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல முன்னணி ஓடிடி நிறுவனம் ரூ 160 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மிக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட டிஜிட்டல் உரிமை ‘தக்லைஃப்’ திரைப்படம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.