அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ?
கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் கமலுக்கு மகனாக நடித்து வருகிறார் சிம்பு . இவர்களுடன் பாலிவுட் நடிகர் அலி ஃபஸல், திரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உட்பட பலர் நடித்து வருகின் றனர் . சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்ட வேண்டியுள்ளது என்கிறார்கள்.ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வரும் இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட சிம்பு தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை தற்போது நிறைவு செய்துள்ளார் இப்படத்தை தொடர்ந்து,மெகா படஜெட்டில் வரலாற்று ஜானரில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சிம்பு 48’ படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் தயாரிப்பு மற்றும் முதல் கட்ட பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில்,கிடைத்த சிறிய இடைவெளியில் ‘ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.