ரஜினிகாந்த் நாளை ‘டிஸ்சார்ஜ்’ ! இளைய ராஜா வாழ்த்து !!
‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்து விட்டு, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்,
கடந்த சில நாட்களாக அவருக்கு சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 30-ம் தேதி மாலை அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு .இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணி முதல் தொடங்கி நடந்தது. இதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தனர். சுமார் 4 மணி நேரம் இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அவரது இதயத்தில் ரத்தநாளத்தில் ‘ஸ்டென்ட்’ வைக்கப்பட்டது.
தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமாக இருக்கிறார். அடுத்த இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.இதையடுத்து அவர் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப் படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இளையராஜா தனது எக்ஸ் வலைதளத்தில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக…” என்று பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக…
— Ilaiyaraaja (@ilaiyaraaja) October 3, 2024