ஆனந்த் ராஜ் மற்றும் ‘பிக்பாஸ்’ சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வடசென்னை கதைக்களத்தில் ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் படமாக ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ உருவாகிறது. இப் படத்தின் கதையை சுகந்தி அண்ணாதுரை எழுதியுள்ளார். ஒளிப்பதிவை அசோக்ராஜ் கவனிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்