சிவராத்திரி தினத்தில் வெளியாகும் தனுஷின் குபேரா !


தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “ராயன்” படத்தை தொடர்ந்து , தற்போது அவர் “குபேரா” மற்றும் “இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு” என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில், “இட்லி கடை” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, அந்த படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், “குபேரா” படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கஉள்ளதாகவும், , இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, சிவராத்திரி விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடித்துள்ளார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்