‘ரெட்ட தல’ படப்பிடிப்பு நிறைவு!

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான  ‘மிஷின் சாப்டர் ஒன்’ படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வணங்கான் ’என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில்,  அருண் விஜய் கடந்த சில மாதங்களாக  கிறிஸ் திருக்குமரன் இயக்கத்தில் ’ரெட்டை தல’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில்,  தற்போது இந்த படப்பிடிப்பு  நிறைவடைந்து விட்டதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி.டி.ஜி யுனிவர்சல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, 47 வினாடிகள் கொண்ட  வீடியோ ஒன்றையும்  வெளியிட்டுள்ளது.இந்த வீடியோவில் அருண் விஜய் படப்பிடிப்பு முடிந்தது என்று கூறும் காட்சி, படப்பிடிப்பு நடந்த லொகேஷன் காட்சியும் இடம் பெற்றுள்ளன. இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர்.