நடிகர் திலகம் நடிப்பில் நவராத்திரி படத்தில் இடம்பெற்ற ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ‘ என்ற பாடல் திருடர்களின் திரை மறைவு வாழ்வைக் காட்டும்.அந்தப் பாடலின் வரியை நினைவூட்டும் வகையில் ‘இரவினில் ஆட்டம் பார் ‘என்கிற பெயரில் ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது.இப்படத்தின் கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகனாக மாரா ராஜேந்திரன் நடிக்க,கதாநாயகியாக கிரேசிநடிக்கிறார். இவர்களுடன் பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்
இப்படத்தின் ஒளிப்பதிவை ஜினோபாபு கவனிக்க, நல்லதம்பி இசையமைத்துள்ளார். ‘பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம் தான் இந்தப் படம்.அந்தக் காமக் கொடூரர்களையும், போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் அழித்து ஒழிக்கும் கறுப்பு நாயகன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். இப் படத்தின் முழுக்கதையும் இரவில் நடக்கிறது. சேலம் ஏற்காடு பகுதியில் மொத்தம் 40 நாட்கள் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம் ‘.என்கிறார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ள ஏ. தமிழ்ச்செல்வன். இந்தப் படத்தை ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.