தண்ணீருக்கு அடியில் படப்பிடிப்பு நடத்திய “தென் சென்னை” படக்குழு!
தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” அறிமுக இயக்குநர் ரங்கா தயாரித்து இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தில்,முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், ‘பொன்னியின் செல்வன்’ இளங்கோ குமனனும் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.“டாடா” இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படத்திற்கு பின்னனி இசை அமைத்துள்ளார்.
சென்னையிலும், பெங்களூரூவிலும் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை சரத்குமார் மேற்கொண்டுள்ளார் , இப்படம் குறித்து இயக்குனர் ரங்கா கூறுகையில்,”சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இப்படங்களில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர்,டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இதில் தண்ணீருக்கு அடியில் சிலர் உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் வருகின்றன. இது கடற்படை கமாண்டோக்களின் பயிற்சி உத்திகளாகும், நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்று காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது , இது ரசிகர்களை கவறும் வகையில் இருக்கும் என்கிறார்.