இனிய தீப ஒளி நாள் நல்வாழ்த்துகள் .

பெருமைக்குரிய தமிழ்ச் சொந்தங்களே ,இனிய உறவுகளே,

அனைவருக்கும் நெஞ்சார்ந்த ‘தீப ஒளி ‘நல்  வாழ்த்துகள். 

எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒன்றிணைந்த மக்களாகவே பழகி வருகிறோம். நட்புணர்வு நம்மிடையே வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் மாச்சரியங்கள் தேர்தல் கால ஊடல் . ஆனால் அதை வெறுப்பு நீர் ஊற்றி சிலர் வளர்க்கப் பார்க்கிறார்கள். அது பயனற்றுப்போவதால் மதங்களை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

அவர்கள் இந்தியத் திருநாட்டின் நச்சுக் கிருமிகள் . 

அவர்களை ,அவர்கள் கையாளுகிற மத வழி பிரிவினையை வேரறுப்போம் ,வினை வெல்வோம் என இந்த தீப ஒளி நாளில் சூளுரை கொள்வோம் . 

வாழ்க இந்தியத் திருநாடு. வெல்க தமிழ்நாடு. 

அன்புடன் ,

‘ கலை மாமணி ‘தேவிமணி .

சினிமா முரசம்..31.10.2024