1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த சம்பவமே ‘சொர்க்க வாசல்’ !
சின்னத்திரை நிகச்சி தொகுப்பாளரும், நடிகரும் , இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படம், ‘சொர்க்கவாசல்’ இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளர்
சித்தார்த் விஸ்வநாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சானியா ஐயப்பன்,நடிக்கிறார். இவர்களுடன் , செல்வ ராகவன், நட்டி என்கிற நட்ராஜ், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ஜான்சன், மவுரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சிறைச்சாலை மற்றும் சிறை கைதிகளின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.வட சென்னை பகுதியில் தனது மனைவி சானியா அய்யப்பனின் துணையுடன் தள்ளுவண்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் ஆர்.ஜெ.பாலாஜி இந்நிலையில் செய்யாத தவறுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார் ஆர்.ஜெ. பாலாஜி
இதையடுத்து அங்கு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் எமோஷனல் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தின் கதை சென்னையில் கடந்த 1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தில் 9 கைதிகள் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது என்கிறார் இப்படத்தின் இயக்குனர் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் தயாராகும் இந்த திரைப்படம் அவரது நடிப்பில் உருவான படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது