‘ஜாலியோ ஜிம்கானா’!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசுகையில் , “கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. அப்போதுதான், டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம். ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. இதற்கான ஸ்க்ரீன்பிளே எழுதுவது எளிது கிடையாது. டெட்பாடியாக மாஸ்டர் இருக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் மாஸ்டர் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் நன்றாக வருவதற்கு கதையைப் போலவே காசும் முக்கியம். தயாரிப்பாளர் ராஜன் சாருக்கு கதை ரொம்பவே பிடித்து விட்டது. நான் கேட்காமலேயே படத்திற்கு நிறைய அள்ளிக் கொடுத்தார். அவர் படத்தின் மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக செய்து கொடுத்தார். பிரபு மாஸ்டருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. மடோனாவை நான் டான் என்றுதான் கூப்பிடுவேன். அந்த அளவுக்கு டானாக சூப்பராக நடித்திருக்கிறார். அபிராமியுடன் எனக்கு இரண்டாவது படம். காமெடி சிறப்பாக செய்திருக்கிறார். தொழில்நுட்ப குழுவும் சூப்பராகப் பணியாற்றியுள்ளனர். எல்லோருக்கும் நன்றி”.. இவ்வாறு அவர் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் இன்னொரு வேடிக்கையும் நடந்தது,கவின் ஜெகராஜ் எழுதிய பாடல்களை தன்னுடைய பெயரில் போட்டுக்கொண்டார் சக்தி சிதம்பரம்,இது பத்திரிக்கையாளருக்கு நடந்த துரோகம் என்று பத்திரிக்கையாளர்கள் குரல் எழுப்பினார்கள். இதற்கு பதில் அளிக்காமல் இயக்குநர் சக்தி சிதம்பரம் மேடையை விட்டு இறங்கி போய்விட்டார். அவருக்கு இது பெருத்த பின்னடைவு என்று கருதுகிறார்கள்.