மறு ஜென்ம கதையை கையிலெடுக்கும் இயக்குனர் அட்லீ !
தமிழ் திரையுலகில் இயக்குனர் அட்லீ, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை குவித்து வந்த நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலமாக பாலிவுட்டில் நுழைந்து அங்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார். படத்தயாரிப்பாளராகவும் மாறியுள்ள இயக்குனர் அட்லீ,அடுத்ததாக
சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகளும் கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.இரண்டு ஹீரோக்கள் பற்றிய கதையாக உருவாகவுள்ள இப்படம், கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் ஆகிய இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகும் மறுபிறவி பற்றிய அதிரடி படமாக உருவாக உள்ளது.
நிகழ் காலத்தின் ஹீரோவாக ஷாரூக்கானும் ஹீரோயினாக நயன்தாராவும் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெறவுள்ள கடந்த கால வரலாற்று காலத்தில் நடக்கும் காட்சிகளில் இன்னொரு வலிமை வாய்ந்த ஹீரோவாக நடிக்க, ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.