ரூ.150 கோடியில் உருவாகும் ‘எஸ்.கே.25’ !
‘அமரன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார்.இந்நிலையில், சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்திலும் இணைந்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் இணையவிருந்த நிலையில், அடுத்தடுத்த இந்திப் படங்களின் கமிட்மெண்ட் காரணமாக இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டது. இதையடுத்து இந்தக் கதையில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். அவருடன் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நாயகியாக ஸ்ரீலீலாவும், மற்றொரு நாயகனாக அதர்வாவும் இந்தப் படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளனர்.எஸ்.கே 25 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது.இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மற்றும் சுதா கொங்காரா ஆகிய மூவரும் சம்பளம் பெறாமல், லாபத்தில் பங்கு பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது, இதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இது அவரது 100வது படமாக அமைய உள்ளது.இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை சுதா கொங்கரா உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.