அந்த நாள் .( விமர்சனம்.) நல்ல நாள்தானா ?

அந்த நாள் –வீணை பாலசந்தர் எழுதி இயக்கி நடித்து புதிய அத்தியாயத்தை தமிழ்ச் சினிமாவில் எழுதி வைத்தார். ‘அந்த நாள் ‘டைட்டிலை வைத்துக்கொண்டு இவர்களும் புதிய முயற்சியில் ஒரு திரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.
புது மேட்டர் . எந்த படத்திலும் சொன்னதில்லை . இவர்கள் சொல்லியிருக்கிறார்கள் . வெற்றி கிடைக்குமா ?
ஆர்யன் ஷாம் . சினிமா இயக்குநர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கிற பஞ்சமி மாளிகையில் திரைப்படம் எடுப்பதற்கு குழுவினருடன் செல்கிறார். போன இடத்தில் வில்லங்கம் வெறியுடன் விரட்டுகிறது. தப்பிச்செல்லவும் முடியவில்லை. முகமூடி மனிதன் பயங்கரமான ஆயுதம் கொண்டு விரட்டுகிறான். மாட்டுகிறார்களா ,இல்லையா ,முடிவு என்ன என்பதை சற்று மிரட்டலுடன் சொல்லியிருக்கிறார்கள். .சரி முடிவுதான் என்ன?
படத்தைப் பாருங்கள் .!
ஆர்யன் ஷாம். நாயகன். ஆள் வாட்ட சாட்டமாக உயரமாக இருக்கிறார், சரியான வேடம். பொருந்திப் போகிறார். முதல் படம் மாதிரி தெரியவில்லை.
இவருக்கு ஜோடி ஆத்யா பிரசாத். வேலை குறைவு என்றாலும் நிறைவான நடிப்பு.
பக்க மேளங்களாக இமான் அண்ணாச்சி ,கிஷோர் ராஜ்குமார் லிமா பாபு ஆகியோர் சரியாகவே வாசித்திருக்கிறார்கள்.
.இசையமைப்பாளர் என்.எஸ்.இராபர்ட், ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் இருவரும் கடமையை செய்துவிட்டார்கள்.
கதை திரைக்கதையை ஹீரோவும் இயக்குநர் வி. வி. கதிரேசனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இதுவரை சொல்லப்படாத நரபலி கதை என்பதால் அதை தைரியமுடன் சொல்வதற்கு இயக்குநர் தயங்கி இருக்கிறார் போலும். தடுமாற்றம் இருக்கிறது.
–தேவி மணி