‘ரிலேஷன்ஷிப்’ பில் இருப்பது எனக்கு பிடிக்கும்! -ஸ்ருதி ஹாசன்பரபரப்பு பேட்டி!!

உலகநாயகனின் மூத்த வாரிசான ஸ்ருதி ஹாசன். நடிகை பாடகி, இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக வலம் வருகிறார். இவர் தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கெல் கார்சல் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அவர்களது காதல் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்த வலியில் இருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் மும்பையை சேர்ந்த டூடுல் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சமீபத்தில், அந்த காதலும் முறிந்து விட்டது.இந்நிலையில் தற்போது சிங்கிளாக இருக்கும் அவர் திருமணம் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்து கூறியுள்ளதாவது,”நான் எப்போதும் காதலை விரும்புகிறேன். ரிலேஷன்ஷிப்பில் இருப்பது எனக்கு பிடிக்கும். அது ஏன் என்றெல்லாம் எனக்கு தெரியாது. என்னை யாரிடமாவது நான் இணைத்துக் கொள்வேன். எனது வாழ்க்கையில் இவர்தான் எனக்கு ஸ்பெஷல் என்ற ஒருவரையும் இதுவரை நான் பார்த்தது இல்லை என்பதுதான் உண்மை. திருமண உறவில் வெற்றி பெற்றவர்கள் எனது நட்பு வட்டாரத்தில் கூட இருக்கிறார்கள் தான். காதல் என்னும் சக்தி: இந்த உலகத்தில் காதல் சக்தி வாய்ந்தது மட்டும் இல்லை. அது நம்மை இயக்கும் தன்மை உடையது. வேலையில், செல்ல பிராணிகளிடத்தில், குழந்தை இடத்தில்கூட காதல் இருக்கலாம். பிரேக் அப்புகளால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நம்மை நாமே ஃபிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு நாம்தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்