தனுசுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன் !
நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி வரும் ’இட்லி கடை’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ’அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் இப்படத்தில் அருண் விஜய், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில், ’குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுசுடன், ராஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷ், ஸ்ருதிஹாசன் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.