கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா!
நடிகை ரெஜினா கசாண்ட்ரா,பிறக்கும் போது இஸ்லாம், இப்போ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து ரெஜினா கசாண்ட்ரா கூறியுள்ளதாவது”என் அம்மா கிறிஸ்டியன், என் அப்பா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் நான் பிறந்த போது முஸ்லீமாகத் தான் பிறந்தேன். என் வாழ்க்கையில் முதல் ஆறு வருடங்கள் என் பெயர் ரெஜினா இல்லை. வேறு பெயரில் தான் என்னை அழைத்தார்கள். என் அம்மா அப்பாவுக்கும் விவகாரத்தான பிறகு என் அம்மா நான் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் அப்போதுதான் அது சரியாக இருக்கும் என நினைத்தார். அவர்களுக்கு இஸ்லாம் மதம் தெரியாது என்பதால் அவர்கள் என்னை கிறிஸ்டினாக வளர்த்து அந்த மாதத்தை பின்பற்ற சொன்னார்கள். அதன் பிறகு தான் நான் ஞானஸ்தானம் பெற்று பைபிள் படித்தேன். பின் என் பெயர் ரெஜினா கேஸ்டினோ என்று மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.