துபாயில் மாதவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நயன்- விக்கி ஜோடி!
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் அவர்கள் தங்கள் விடுமுறையை செலவிடுவது துபாய் நாட்டில் தான். தான். சமீபத்தில் தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடியது கூட துபாய் நாட்டில் தான். இந்நிலையில், நடிகை நயன் – விக்கி தம்பதியர் 2025ஆம் ஆண்டு புத்தாண்டை துபாயில் நடிகர் மாதவன் – சரிதா பிர்ஜே தம்பதியுடன் இணைந்து மாதவனின் சொந்தமான சொகுசுக் கப்பலில் கொண்டாடியுள்ளனர் . இது தொடர்பான வீடியோக்களை நயன் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நயன், விக்கியை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு . ஒரே போர்வையைப் போர்த்திக் கொண்டு அமர்ந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘செம ரொமான்ஸ் போல’ என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் அந்த
வீடியோ பதிவுக்கு கேப்ஷனாக, ‘எங்களைச் சுற்றி முழுவதும் அன்புதான் உள்ளது’ எனவும் பதிவிட்டுள்ளனர்.மாதவன் மற்றும் நயன்தாரா இருவரும் டெஸ்ட் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.