துபாய் கார் ரேஸில் இருந்து அஜித் ‘திடீர்’ விலகல்!

நடிகர் அஜித் துபாய் கார்பந்தய போட்டியில் இருந்து விலகி விட்டதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். துபாயில் நடந்து வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்பதற்காக தீவிரமான பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் பயிற்சியின் போது அவரது கார் விபத்துக்குள்ளான வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அஜித் கலந்து கொண்ட 24 எச் சீரியஸ் ரேஸ் துபாயில் தற்போது நடந்து வரும் நிலையில், இந்த ரேசில் அஜித் பங்கேற்க இருந்தார். இந்நிலையில், தற்போது அஜித் தரப்பிலிருந்து பரபரப்பான அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:”கடந்த இரண்டு நாட்களில் துபாய் 24 தொடருக்கான தயாரிப்புகளில் இருந்து அஜித்குமார் விலகியுள்ளார். சமீபத்திய விபத்தின் தாக்கத்தை அஜித்குமார் ரேசிங் மையக்குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது. இந்த பந்தய வடிவம் மிகவும் கடினமானது. நீண்ட சீசனுக்கு முன்னால் இருக்கும் சவால்களை அணி கருத்தில் கொண்டுள்ளது. எனவே, அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் அஜித் அவர்களின் நல்வாழ்வு மற்றும் அணியின் ஒட்டுமொத்த வெற்றி ஆகியவை முதன்மை உரிமைகளாக உள்ளன.விரிவான ஆலோசனைக்கு பிறகு, குழு தங்கள் உத்தியை மறுபரிசீலனை செய்து சில மாற்றங்களை செய்தது. அதன்படி, வரவிருக்கும் ரேஸ் தொடரில் அஜித் பங்கேற்கவில்லை. இது கடினமான முடிவு என்றாலும், தன்னலமற்ற முடிவை அஜித் எடுத்துள்ளார். இருப்பினும், அவரது அணியினர் இந்த ரேஸில் பங்கேற்பார்கள் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.